தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய மாணவி பாத்திமா தற்கொலை! முதல் முறையாக விளக்கமளித்த சென்னை ஐஐடி

Report Print Raju Raju in இந்தியா

மாணவி பாத்திமா தற்கொலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் வேதனை அளிப்பதாக சென்னை ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஐஐடி குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவியது.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஐஐடி நிர்வாகம், மாணவி பாத்திமா தற்கொலை குறித்து நேர்மையான போலீஸ் விசாரணைக்கு ஐஐடி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தருகிறது.

சிறந்த மாணவி பாத்திமாவின் தற்கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாத்திமா தற்கொலை பற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணை முடியும் முன்பாக சில ஊடகங்களே ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் பற்றி தவறான செய்திகள் வெளியிடுகின்றன. ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்தியால் நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மனநிலை, உடல்நிலையை சிறப்பாக பராமரிக்க ஐஐடி உறுதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்