அம்மாவுடன் சண்டை....! நிச்சயமான பெண் எடுத்த விபரீத முடிவு

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் தன்னுடைய திருமணத்திற்காக தாய் கடன் வாங்கியதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஈரோட்டின் பெருந்துறையை சேர்ந்த தம்பதி சந்திரன்- மோகனா, இவர்களுக்கு சத்யா(வயது 21), மற்றும் பிரவீன்குமார்(வயது 18) என இருபிள்ளைகள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சந்திரன் இறந்துவிட்டதால், பிள்ளைகளுடன் கோயம்புத்தூர் வந்து குடியேறிய மோகனா, விவசாய வேலை செய்து வந்துள்ளார்.

குடும்பம் கஷ்டத்தில் இருந்தால் பலரிடம் கடன் வாங்கி அதை அடைக்கவே சிரமப்பட்டுள்ளார் மோகனா.

இந்நிலையில் சத்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் செய்துள்ளார், திருமணத்திற்காக மீண்டும் கடன் வாங்க சத்யா, மோகனாவிடம் சண்டையிட்டுள்ளார்.

அத்துடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்ற சத்யா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, சத்யாவை எங்கு தேடியும் கிடைக்காததால் மோகனாவுக்கு பயம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சில தொலைவில் இருக்கும் கிணற்றில் இளம்பெண் ஒருவர் விழுந்து கிடப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

பதறித்துடித்து போன மோகனா சென்று பார்த்த போது, சத்யா என தெரியவந்ததால் கதறி அழுதுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்