பரோலில் வந்த பேரறிவாளன் இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது! அவருக்கு என்ன பிரச்சனை?

Report Print Raju Raju in இந்தியா

சிறையிலிருந்து பரோலில் வெளியில் வந்துள்ள பேரறிவாளுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து அவரது இரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் திகதி பேரறிவாளன் பரோலில் வந்த நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பேரறிவாளனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இன்று காலையிலும் காய்ச்சல் அதிகரித்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் பேரறிவாளனுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்தனர்.

மேலும் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேரறிவாளனின் இரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இரத்த பரிசோதனை முடிவை பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்