சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்கள் போவதற்கு தடை கேட்டு வழக்கு! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

2018 செப்டம்பரில், இந்தியாவின் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பளித்தது.

இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சிகளும், தலைவர்களும் இதை விமர்சித்தனர். வன்முறை சம்பவங்கள் நடந்தன. சுமார் 3,500 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்குள் செல்ல குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரிய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வழங்கப்பட்டது. அதன்படி சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களின் விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்