திருமணத்தில் பூமாலைக்கு பதிலாக துப்பாக்கியை கையில் வைத்திருந்த மணமக்கள்! பீதியான விருந்தினர்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இயந்திர துப்பாக்கியுடன் மணமேடையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த புதுமணத்தம்பதி கைது செய்யப்பட்டனர்.

நாகலாந்தில் திமர்பூரில் நாகா சோசலிச கட்சித் தலைவரின் மகன் போஹட்டோ கிபா என்பவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கைகளில் மாலைகள் மற்றும் பூங்கொத்துடன் இருக்க வேண்டிய புதுமணத்தம்பதி இயந்திர துப்பாக்கியுடன் காட்சியளித்தனர்.

இருவரும் இப்படி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பீதிக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதையடுத்து திருமண வீட்டில் கையில் துப்பாக்கியுடன் மணமக்கள் இருப்பது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதை காட்டுவதாக எதிர்கட்சிகள் கடுமையான விமர்சித்து வந்தது.

இதை தொடர்ந்து புதுமணத்தம்பதியை பொலிசார் நேற்று கைது செய்தனர், அவர்களோடு துப்பாக்கியை கொடுத்து உதவிய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பின்னர் மணமக்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்