திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை: கடிதத்தில் வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரள மாநிலம் ஆழப்புழா அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

கணவரால் கொல்லப்பட்ட கிருதிமோகன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், தமது பேரில் உள்ள அனைத்து சொத்துக்களும் தமது மகளுக்கு மட்டுமே சொந்தம் என குறிப்பிட்டுள்ளார்.

தமது கணவருக்கு சொத்துக்களில் எந்த உரிமையும் இல்லை எனவும், தமது மகள் எதிர்காலத்தில் தனித்துவிடப்படாமல் இருக்கவே கடிதம் எழுதுவதாகவும் கிருதி குறிப்பிட்டுள்ளார்.

கிருதிமோகன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் படுக்கை அறையில் இருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இச்சம்பவத்தை அடுத்து மாயமான கணவர் வைசாக் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தலச்சிற பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட கிருதி, பின்னர் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

இந்த திருமணத்தில் கிருதிக்கு 3 வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளார். இந்த நிலையிலேயே கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வைசாகுடன் கிருதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வைசாக் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் ஒரு மாதத்தில் அங்கிருந்து திரும்பியுள்ளார்.

பின்னர் தொழில் தொடர்பான தேவைகளுக்காக கிருதியின் பெற்றோரின் சொத்துக்களை அடகு வைத்து சுமார் 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இருவரும் வாக்குவாதத்தில் ஏற்பட்ட நிலையில், படுக்கை அறையில் வைத்து கிருதியை வைசாக் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் குடியிருப்பில் இருந்து வெளியேறி தமது வாகனத்தில் மாயமாகியுள்ளார். கிருதியின் பெற்றோரே இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்