நடிகர் ரஜினிகாந்த் ஆளுமை இல்லாதவர்! சீமான் கடும் விமர்சனம்

Report Print Raju Raju in இந்தியா

ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போது அரசியலுக்கு வராத ரஜினிகாந்த் ஆளுமை இல்லாதவர் என சீமான் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என கூறினார்.

ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆளும் கட்சி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் எனவும், திமுக பொருளாளர் துரைமுருகன், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் எனவும் கூறினார்கள்

இந்நிலையில் ரஜினிகாந்த் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் பொழுது அரசியலுக்கு வராத ரஜினி ஆளுமை இல்லாதவர்.

தற்போது அவர்கள் இல்லாததால் அரசியலுக்குள் வரவேண்டும் என சொல்லுவது தான் ஆளுமையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தனக்கு பாஜ காவி பூச முடியாது என்று சொன்ன ரஜினியால் அரை மணி நேரம் கூட தன் கருத்தில் உறுதியாக நிற்க முடியவில்லை. மீண்டும் அவரே அதை பூசி மெழுகினார் என சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்