மணமேடையில் இருந்த மணமகன் வாட்ஸ் அப்புக்கு வந்த வீடியோ! நின்று போன திருமணம்.. வேறுபெண்ணுக்கு கட்டப்பட்ட தாலி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் மணமேடையில் இருந்த மணமகனின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதோடு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நெசப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அயனாவரத்தை சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 10ம் திகதி திருமணம் நடைபெற இருந்தது.

முன்னதாக 9ம் திகதி மாலை இருவருக்கும் திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது மேடையில் இருந்த மணமகனின் செல்போன் வாட்ஸ்அப்பிற்கு தனக்கு மனைவியாக போகும் புதுப்பெண் வேறு ஒரு வாலிபருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ அடுத்தடுத்து வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் உடனடியாக வரவேற்பு விழா மற்றும் திருமணத்தை நிறுத்தினார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மணமகன் தனது திருமண விழாவிற்கு வந்த உறவுக்காரப் பெண் ஒருவருக்கு தாலிக்கட்டி மறுநாள் (10ஆம் திகதி) திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மணமகனுக்கு புகைப்படங்களை அனுப்பி மகளின் திருமணத்தை நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண்ணின் பெற்றோர் பொலிசில் புகார் செய்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அந்த இளம்பெண் வீட்டின் அருகில் உள்ள வாலிபரை காதலித்து வந்ததும், ஆனால், பெற்றோர் காதலை ஏற்க மறுத்து உடனடியாக வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணும், காதலனும் சேர்ந்து திருமணத்தை நிறுத்த திட்டமிட்டனர்.

அதன்படி இளம்பெண், மணமகனின் செல்போன் எண்ணை காதலனிடம் கொடுத்து இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்ப சொன்னதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய சூழலில் இளம்பெண்ணின் பெற்றோர் தனது மகளை காதலனுடன் சேர்த்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்