பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது மயங்கி சரிந்த ஆசிரியர்.... அதிர்ந்து போன மாணவர்கள்!

Report Print Abisha in இந்தியா
139Shares

நாகை மாவட்டத்தில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது மயங்கி சரிந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உம்பளச்சேரியில் பணிபுரித்து வருபவர் ஆசிரியர் ராமதாஸ். இவர், தஞ்சையில் தங்கி தினமும் உம்பளச்சேரி அரசு மேல் நிலைபள்ளிக்கு வந்து ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்துள்ளார். அப்போது திடிரென மரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரித்துள்ளார் அவர். இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சில் மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் ராமதாஸை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்