தனது தோட்டத்தில் வேலைக்கு வந்தவருடன் பழக்கம்... பாபநாச படபாணியில் கணவனை கொன்றது அம்பலம்!

Report Print Abisha in இந்தியா
1638Shares

கேரளாவில், கணவரை கொலை செய்ய தூண்டிய பெண் அதை தமிழில் வெளிவந்த பாபநாச படபாணியில், மூடி மறைக்க முற்பட்டு மாட்டிக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், ரிஜோஷ் என்ற 31வயது நபரின் மனைவி லிஜா. இவர்களுக்க சொந்தமாக விவசாய நிலம் இருந்துள்ளது. அதில், வாசிம் என்பவர் மேலாளராக பணியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், வாசிம்க்கும் லிஜாவிற்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, ரிஜோஷை கொலை செய்ய திட்டமிட்ட இருவரும், அதிகளவில் மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் உயிர் பிரிந்ததும், தோட்டத்தினுள் புதைத்துள்ளனர்.

இந்நிலையில், ரிஜோஷ் மாயமாகியதாக கடந்த 31ஆம் திகதி பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். பொலிசார் வீட்டை சுற்றியும் விவசாய நிலத்திலும் ஆய்வு மேற்கொண்ட பொழுது அங்கு குழி தோண்டபட்டிருப்பதை பார்த்துள்ளனர். அதை விசாரித்தபோது வாசிம் அதில், இறந்த கன்று குட்டியை புதைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் சந்தேகம் வலுக்கவே பொலிசார் அதை தோண்டி பார்க்க திட்டமிட்டுள்ளனர். பொலிசார் அதை தோண்டு பணிகள் முன்னெடுக்க திட்டமிட்தை அறிந்து லிஜா மற்றும் வாசிம் இரண்டு வயது குழந்தையுடன் தப்பினர்.

உடலை தோண்டி எடுத்த பொலிசார் பிரதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தப்பி சென்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ரிஜோஷ்க்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும் ஆனால் சமீப காலமாகதான் இந்த பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வாசிம்தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சிலர் இந்த கொலை திருஷ்யம் (தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட) படபாணியில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ரிஜோ- லிஜா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்