தாய், சகோதரி சடலங்களுடன் இரண்டு மாதம் தனியாக தங்கியிருந்த பெண்! மனதை கலங்கடிக்கும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தாய் மற்றும் சகோதரி சடலத்துடன் வீட்டில் இரண்டு மாதம் பெண் தங்கியிருந்த நிலையில் அது குறித்த உருக்கமான பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே இரண்டு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததும் அதன் அருகில் பெண்ணொருவர் தூங்கி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இரண்டு சடலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

இது குறித்த விசாரணையில், உயிரிழந்த பெண்கள் புஷ்பா ஸ்ரீவஸ்தவா மற்றும் அவர் மகள் விபா என தெரியவந்தது.

புஷ்பாவின் கணவர் கடந்த 1990ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதன் பின்னர் அவர் தனது மகள்களான விபா, ரூபா மற்றும் தீபாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபா உயிரிழந்தார். இதையடுத்து புஷ்பா, விபா, தீபா ஆகிய மூவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் புஷ்பாவும், விபாவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். அதன் உணராத தீபா அவர்கள் சடலத்துடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

தற்போது தீபாவை பொலிசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே புஷ்பா, விபாவின் மரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers