பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

Report Print Vijay Amburore in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் உடல்நலம் கருதி, சிறைத்துறை 30 நாள் பரோல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்