மூன்று வயது சிறுவனின் நாக்கை துண்டித்து ஆற்றில் வீசிய கொடூர தாயார்: நடுங்க வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மூன்று வயது மகனின் நாக்கை துண்டித்த பின்னர் தாயார் ஒருவர் சிறுவனை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

28 வயதான கமலா என்ற யுவதியே சொந்த மகனை கொடூரமாக கொலை செய்தவர். 3 வய்து சிறுவன் இடைவிடாது அழுததாலையே கமலா ஆத்திரம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதனன்றே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுவன் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இடைவிடாது அழுதுள்ளான்.

இது தாயார் கமலாவை கோபம் கொள்ள வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் நாக்கை கத்தியால் துண்டித்து, ரத்தம் ஒழுக சிறுவனை ஆற்றில் வீசியுள்ளார்.

Photo Credit: Times Now

தொடர்ந்து மகனை காணவில்லை என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே பாத்ரா ஆற்றில் சிறுவன் ஒருவனின் சடலம் மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர் கமலாவை அடையாளம் காண அழைத்துள்ளனர்.

கமலா தமது மகனை அடையாளம் கண்டதுடன், கொலை செய்தது தாம் தாம் என ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்ததுடன், அவர் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்