அரசு அலுவலக்கத்தில் அதிகாரி எரித்துக்கொலை எதிரொலி... வேலிபோட்டு மனுக்கள் வாங்கிய தாசில்தார்!

Report Print Abisha in இந்தியா

ஆந்திரமாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவர் வேலிபோன்று கயிறு கட்டி கொண்டு மக்களிடம் மனுக்கள் வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கான மாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவர் உயிருடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது போன்று தனக்கும் நிகழும் என்று ஆந்திர மாநிலம் கர்னூர் தாசில்தார் உமா மகேஷ்வரி, வேலி போன்று கயிறுகட்டி கொண்டு பொதுமக்களை தனக்கு அருகில், அனுமதிக்காமல் மனுக்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், மதுபோதையில் எந்த விண்ணப்பமும் இல்லாமல் அலுவலகத்துக்குள் திடீரென நேற்று புகுந்த நபர்களை கண்டு அச்சமடைந்ததாகவும் அதனால் பார்வையாளர்களுக்கும் தனக்கும் இடையே இடைவெளி ஏற்படுமாறு கயிறு கட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஒருமணி நேரத்தில் அந்த கயிற்றை தாசில்தார் உமாமகேஸ்வரி அகற்றினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்