ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான தமிழருக்கு பரோல் கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸின் பரோல் மனு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களில் ஒருவர் ராபர்ட் பயாஸ்.

இவர் தனது மகன் தமிழ்கோவின் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பரோல் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், ஆஜராகி, பரோல் கோரிய விண்ணப்பத்தில் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும்

தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்