எச்.ஐ.வி பாதித்த தம்பதிக்கு பிறந்த மூன்றாவது குழந்தை! தாய்ப்பால் கொடுக்க மறுத்ததால் வெளியான உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி தங்களது குழந்தையை 1.1 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பில்லை.

இந்த குடும்பம் வறுமையால் தவித்த நிலையில் மீண்டும் அந்த தம்பதிக்கு 25 நாட்களுக்கு முன்னர் மூன்றாவது குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைக்கு இதய பிரச்னை இருந்த சூழலில் அதை அந்த தம்பதி விற்க முடிவு செய்ய, மருத்துவமனை ஊழியர் ஒருவர் அதற்கு உதவினார்.

இதனையைடுத்து அந்த குழந்தையை 1.1 லட்சம் ரூபாய்க்கு 50 வயதான தம்பதிக்கு இவர்கள் விற்றனர்.

இந்நிலையில் இந்தக் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஆகவே குழந்தையை வாங்கிய வயதான தம்பதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறது.

ஆகவே தாய்பால் கொடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். அந்தச் சமயத்தில் இந்த வயதான தம்பதிகள் மறுத்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மருத்துவர் நடத்திய விசாரணையில் அவர்கள் குழந்தை தங்களுடையது இல்லை என்று ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரியிடம் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் எச்.ஐ.வி. பாதித்த தம்பதி தங்களது குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றதை ஒப்புக் கொண்டனர். அதேபோல குழந்தையை வாங்கிய வயதான தம்பதியும் குழந்தையை வாங்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் குழந்தையை வாங்கிய தம்பதியின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்ததால் அவர்களின் மகன் நினைவாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது மருத்துவமனையில் பணி செய்யும் பெண் ஒருவர் இவர்களுக்கு ஆண் குழந்தையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவர் கூறியது போல் இந்தக் குழந்தையை வாங்கி கொடுத்துள்ளார்.

அதற்கு இந்த வயதான தம்பதியிடம் 20 ஆயிரம் கமிஷனாக அப்பெண் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்