11 வயது சிறுமி மற்றும் அவர் தம்பி சீரழித்து கொலை! தமிழகத்தை உலுக்கிய வழக்கில் கொடூரனுக்கு மரண தண்டனை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இரண்டு பள்ளி குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைதான கொலையாளியின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கோவையை சேர்ந்த ஜவுளி வியாபாரி ரஞ்சித். இவரது குழந்தைகள் முஸ்கான் (11), ரித்திக்(7). தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த 2010 அக்டோபர் 29ம் திகதி காலை பள்ளி செல்வதற்கு வேனில் ஏறினர்.

பின்னர் வேன் டிரைவர் மோகனகிருஷ்ணன், நண்பன் மனோகரன் ஆகியோர் குழந்தைகளை கடத்தி சென்றனர்.

இதையடுத்து பொள்ளாச்சி அருகே சிறுமி முஸ்கானை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்த சிறுவன் ரித்திக்கையும் சீரழைத்த அவர்கள் பின்னர் கொன்றனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பொலிசார் மோகனகிருஷ்ணன், மனோகரனை கைது செய்தனர்.

இவர்களை வழக்கு விசாரணைக்காக கொண்டு செல்லும்போது தப்பி செல்ல முயன்ற மோகனகிருஷ்ணனை பொலிசார் சுட்டு கொன்றனர்.

இதையடுத்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்புக்கு எதிராக சீராய் ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அதன் மீதான தீர்ப்பை கடந்த அக்டோபர் 16 -ம் திகதி ஒத்திவைத்த நீதிபதிகள் இன்று வரை மரண தண்டணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலினாரிமன் தலைமையிலான அமர்வு சீறாய்வு மனுவை தள்ளுபடி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது.

தற்போது மனோகரன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அடுத்த கட்டமாக குடியரசு தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அப்படி இல்லை என்றால் தூக்குத்தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்