தனியாக வீட்டிற்கு வந்த அண்ணன் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கொழுந்தன்

Report Print Vijay Amburore in இந்தியா

வீட்டுமனை தகராறில் அண்ணன் மனைவியை கொலை செய்துவிட்டு கொழுந்தனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (32 ). இவருக்கு சிவா (30) என்கிற மனைவியும், ஹரிஹரன் (11), ஆகாஷ் (9 ) என இரண்டு மகன்களும் உள்ளனர்.

குழந்தைவேலின் தம்பியின் பெயர் ஆறுமுகம். இவர் குழந்தைவேலின் வீட்டிற்கு முன்புறம் வீட்டில் தன்னுடைய தாயுடன் தனியாக வசித்து வந்தார்.

இரண்டு வீடுகளும் முன்புறமும், பின்புறமும் அமைந்திருந்ததால், வீட்டுமனை தொடர்பாக ஆறுமுகத்திற்கும், சிவாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் குழந்தைவேல் உள்ளே புகுந்து சமாதானம் பேசி விலக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மீண்டும் சிவாவிற்கும், அறுமுகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதும் வழக்கம் போல இருவரையும் சமாதானம் செய்த குழந்தைவேல், தன்னுடைய மனைவியை கூலிவேலைக்கு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனால் ஆத்திரம் தீராத ஆறுமுகம், மதிய சாப்பாட்டிற்காக தனியாக வீட்டிற்கு வந்த சிவாவை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் சிவா மயங்கி விழுந்ததும், பதற்றமடைந்த சிவா, வீட்டிற்கு ஓடி சென்று தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதற்கிடையில் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், வேகமாக சிவாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிவா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...