திருமணம் செய்யாமல் தனியாக வசித்த ஆசிரியைக்கு நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. பிணமாக கிடந்த செல்ல நாய்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் தனி வீட்டில் வசித்து வந்த பெண் சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முனிவாந்தாங்கல் கிராமத்தில் வேலூர் சாலையில் அமைந்துள்ள தனி வீட்டில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை லூர்துமேரி.

லூர்துமேரி திருமணம் செய்துகொள்ளாமல், தனது பாதுகாப்புக்கு என்று நாய் ஒன்றை மட்டும் வளர்த்து வந்தார். உறவினர்கள் அனைவரும் வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் வசித்து வருவதால் லூர்துமேரி மட்டும் வீட்டில் தனியாகவே இருப்பார்.

இந்நிலையில் நேற்று லூர்துமேரியை காண அவர் உறவினர் வந்து பூட்டப்படாத கதவை திறந்து பார்த்தபோது, லூர்துமேரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததோடு உடலும் எரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்தனர், அப்போது அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த குட்டி நாய் ஒன்றையும் மர்ம நபர்கள் அடித்துக் கொன்று தூக்கி வீசியுள்ளனர். அந்த நாயும் வீட்டின் அருகே பிணமாக கிடந்தது.

பொலிசார் கூறுகையில், செவ்வாய்கிழமை நள்ளிரவில் லூர்துமேரியின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நாய் குரைத்ததால் அதனை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

வீட்டில் உள்ள பீரோவில் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது லூர்துமேரி தடுத்ததால் அவரது தலையை பிடித்து, தீரன் படத்தில் வருவது போல சுவற்றில் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறியுள்ளனர்.

லூர்துமேரி குறித்து அக்கம்பக்கம் வசித்தவர்கள் கண்ணீருடன் கூறுகையில், லூர்துமேரி தனியாக வசித்து வந்தார்.

மாலை நேரத்தில் அருகிலுள்ள மாதா கோவிலுக்கு லூர்துமேரி தினமும் சென்று ஜெபம் செய்வார்.

அப்போது அங்குள்ள குழந்தைகளுக்கு பிஸ்கெட், பழங்களை அன்புடன் வாங்கித் தருவார். மேலும் உதவி கேட்டு வருபவர்களுக்கு பணம் வழங்குவார்.

எங்கு சென்றாலும் வழியில் நின்று அவ்வழியே பைக்கில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

எல்லோரிடமும் அன்புடன் பழகி வந்தவர் கொலை செய்யப்பட்டு விட்டாரே என வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்