எங்க நிச்சயதார்த்தம் முடிந்தது... அதன் பின்? காதலியை பறிகொடுத்து உயிர் தப்பிய இளைஞன் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண் தன் காதலனுடன் கிணற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது, கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில், அது உண்மையில்லை என்று உயிர் தப்பிய காதலன் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த இளம் பெண் மெர்ஸிக்கும், அவருடைய காதலன் அப்புவிற்கும் கடந்த 2-ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து இந்த ஜோடி அருகில் இருக்கும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்திற்கு சென்று, அங்கிருக்கும் கிணற்றின் அருகே செல்பி எடுக்க முயன்ற போது, மெர்ஸி கிணற்றின் உள்ளே விழுந்து இறந்துவிட்டதாகவும், அப்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் செய்தி வெளியாகின.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அப்புவிடம் பிரபல தமிழ் உடகம் சம்பவ தினத்தன்று உண்மையில் நடந்தது என்ன? என்று கேட்ட போது, நான் ஒரு மெக்கானிக்கால் இன்ஜினியர், முதலில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த நான் இப்போது, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நானும், மெர்சியும் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர்கள் என்பதால், எங்கள் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதன் படி நிச்சயதார்த்தமும் முடிந்தது.

சம்பவ தினத்தன்று, அவள் எனக்கு போன் செய்தாள், நான் எடுக்கவில்லை என்றவுடன் சகோதரனின் போனிற்கு அழைத்து, நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினாள்.

அப்போது என் அம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். வீட்டிற்கு வந்த மெர்சி முதலில் வெளியில் போகலாம் என்றார்? நான் எங்கே என்று கேட்ட போது அவர் பிகில் திரைப்படத்திற்கு போகலாம் என்று கூறினார்.

அதன் பின் என் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் படத்திற்கு வேண்டாம், நாம் வெளியில் செல்லலாம் என்றார். நானும் சரி என்று இரு சக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்றேன்.

நெமிலிச்சேரி பைபாஸ் சாலை வழியாக நாங்கள் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த வயலைக் கண்ட மெர்சி நாம் இங்கு புகைப்படம் எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்.

நானும் சரி என்று வயல் இருக்கும் இடத்திற்கு சென்றேன், அப்போது கிணறு இருந்ததால், கிணற்றுக்குள்ள இருக்கும் தண்ணீர் அருகே சென்று புகைப்படம் எடுக்கலாம் என்றாள், நான் அவளிடம் எனக்கு முழுதாக நீச்சல் தெரியாது என்றேன், அவள் காதலிக்காக இதைக் கூட செய்யமாட்டாயா என்று கூற, நான் கிணற்றின் படிகளில் இறங்கி நின்று கொண்டிருந்தேன்.

அவள் மூன்று படிகளை தாண்டி நான்காவது படியில் கால் வைக்கும் போது தவறி என் மேல் விழுந்தாள், நாங்கள் இருவரும் தண்ணீருக்குள் விழ, நான் அவளை தண்ணீரில் தேடினேன், ஆனால் கிடைக்காததால், தண்ணீர் மேல் காப்பாற்றும் படி கத்தினேன்.

அந்த வழியே சென்ற முதியவர் என்னுடைய சத்ததைக் கேட்டு, ஒரு டியூப் ஒன்றை எடுத்து போட்டார். நான் அதை பிடித்து மேல வர, அவரிடம் மெர்சி விழுந்த விஷயத்தை கூற, அவர் எனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி, அருகில் இருந்த சிலரை அழைத்து வர, நான் மயங்கிவிட்டேன், அதன் பின் அவள் இறந்த செய்தி தான் தெரிந்தது என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்