சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய இரு இலங்கை பெண்கள்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 இலங்கை பெண்கள், தங்கம் கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நேற்று சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் ஃபாத்திமா மற்றும் தெரசா ஆகிய 2 இலங்கை பெண்கள் வந்தனர்.

இவர்களின் வயிற்றுப்பகுதி இயல்புக்கு மாறாக காட்சியளித்ததால் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அழைத்துச் சென்றனர்.

அப்போது, இவர்கள் இருவரையும் காரில் கடத்திய கும்பல், அவர்களுக்கு இனிமா கொடுத்து வயிற்றிலிருந்த தங்கத்தை எடுத்துவிட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பல்லாவரம் காவல்நிலையத்திற்கு வந்த 2 பேரும் தங்கள் பாஸ்போர்ட்டை சுங்கத்துறை அதிகாரிகள் பறித்துக் கொண்டதாக கூறி புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதும், பின்னர் இருவரும் கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இவர்கள் மீது கைகளால் அடித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல்லாவரம் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே இரண்டு இலங்கை பெண்களும் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், எந்த தரப்பிலிருந்தும் கடத்தல் புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்