சாலையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த 9 மாத கர்ப்பிணி பெண்! வயிற்றில் இருந்த குழந்தைக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 9 மாத கர்ப்பிணி பெண் இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கதிரேசன் திருப்பதி (30). இவருக்கும் கனிமொழி (23) என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கனிமொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். வரும் 10-ம் திகதி அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று கனிமொழி தனது கணவருடன் பைக்கில் தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.

பரிசோதனை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவர்களின் பைக் மீது பின்னால் வந்த ஜே.சி.பி எந்திரம் வேகமாக மோதியது.

இதில் கனிமொழி பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கனிமொழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரின் குழந்தையை உயிருடன் மீட்க மருத்துவர்கள் போராடினர்.

நீண்ட போராட்டத்திற்கு இடையே குழந்தை இறந்தே பிறந்தது. இறந்தது ஆண் குழந்தையாகும்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்