குளியலறையில் பதுங்கியிருந்த முதலை... நள்ளிரவில் சத்தம் கேட்டு விழித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in இந்தியா

குஜராத் மாநிலத்தில் நள்ளிரவில் குளியலறைக்குள் புகுந்த முதலையை வனத்துறை அதிகாரிகள் மீட்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர பதியார் என்கிற நபர் செவ்வாய்க்கிழமை இரவு, தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அதிகாலை 2.45 மணியளவில் வினோதமான ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் தூக்கத்திலிருந்து விழித்த அவர், என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள, சத்தம் வரும் பகுதியான குளியலறைக்கு சென்று கதவை திறந்துள்ளார்.

உள்ளே நான்கரை அடி நீளமுள்ள முதலை இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த வனவிலங்குகள் மீட்பு குழு, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அதனை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

முதலை அருகிலுள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம். அருகிலுள்ள ஆறுகள் ஏராளமான ஊர்வனவற்றின் இருப்பிடமாக இருப்பதால், வதோதராவில் இதுபோன்ற பார்வை பொதுவானது என்று மீட்புக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்