குழந்தை சுர்ஜித்துக்கு செய்யும் உண்மையான அஞ்சலி இதுதான்! அவன் இறப்பை முதலில் உலகுக்கு கூறியவரின் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

குழந்தை சுர்ஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் 80 மணி நேர மீட்பு முயற்சிக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த சம்பவம் தமிழத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சுர்ஜித் உயிரிழந்த செய்தியை முதன்முதலில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், குழந்தை சுர்ஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது

தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

சுர்ஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும்

பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்