ஒரு சடலத்துக்கு இறுதிச்சடங்கு நடத்த நினைத்தபோது அருகிலேயே வைக்கப்பட்ட இன்னொரு சடலம்.. புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் உயிரிழந்து இருவரின் சடலங்களும் அருகருகில் வைக்கப்பட்டிருந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவரது மகன் ராஜாங்கம் (46). ராஜாங்கத்துக்கு திருமணமாகி ஆறு பிள்ளைகள் உள்ளனார்.

நீண்ட நாட்களாக வயிற்று வலியால் துடித்து வந்த ராஜாங்கத்துக்கு நேற்று வலி அதிகமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது மகன் உடலை பார்த்து ஆறுமுகம் கதறி அழுதார், அந்த சமயத்தில் துக்கம் தாளாத அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு மருத்துவர் வந்து பரிசோதனை செய்த போது ஆறுமுகம் உயிரிழந்தது தெரியவந்தது.

ராஜாங்கத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆறுமுகமும் இறந்ததால் அவர் சடலமும் அருகிலேயே வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்