மனைவியை பிரிந்து தனியாக வசித்தேன்... அப்போது அதை அறிந்தேன்... கணவரின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (48). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா (38). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் மோகன், கவுசல்யா வசித்து வந்த வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மோகன், கவுசல்யாவை தடியால் அடித்தும், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியும் கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மோகன் பொலிசில் சரணடைந்தார். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், கவுசல்யா எனது மாமனார் நிலத்தை விற்றதில் கிடைத்த பணத்தில் சுமார் ரூ.50 லட்சம் வரை வாங்கி வங்கியில் டெபாசிட் செய்து கொண்டாள்.

அது முதல் அவள் என்னை மதிப்பதில்லை. அந்த பணத்தை கேட்டது தொடர்பாக எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் உறவினர் ஒருவரிடம் தொடர்பு வைத்திருந்ததும், அடிக்கடி அவரிடம் செல்போனில் பேசி வந்ததையும், அவருக்கு பண உதவி செய்து வந்ததையும் அறிந்தேன்.

இதனால் மேலும் ஆத்திரம் அதிகமாகி, சம்பவத்தன்று கவுசல்யாவை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மோகனின் தம்பி தங்கவேலு (43) என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்