டியூசன் படிக்க வந்த மாணவிகளை மோசமாக வீடியோ எடுத்து ஆசிரியை செய்த அதிர்ச்சி செயல்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் டியூசன் படிக்க வந்த மாணவிகளை நிர்வாணப்படுத்தி, அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டிய பெண் மற்றும் ஆண் நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தி.நகரை சேர்ந்தவர் சஞ்சனா(28). பட்டதாரியான இவர் வீட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுத்து வந்துள்ளார்.

இவரிடம் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டியூசனில் படித்து வரும் மாணவி, ஒருவர் மிகவும் சோர்வாக வீட்டிற்கு சென்றதால், அவரைக் கண்டெ பெற்றோர் என்ன என்று கேட்க, உடனே அந்த மாணவி சஞ்சனா ஆசிரியர் மற்றும் அவரின் நண்பர் பாலாஜி(38) இருவரும் மிரட்டி என்னை, அங்கு இருக்கும் மாணவன் ஒருவனுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் படி வற்புறுத்தி வீடியோ எடுத்தனர் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அருகில் இருக்கும் மாம்பலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பொலிசார் சஞ்சனா மற்றும் பாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், டியூசன் சொல்லித் தரப்படும் வீட்டில் இதற்காகவே படுக்கை அறை ஒன்றை இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன் பின் டியூசனுக்கு வரும், அழகான மாணவன் மற்றும் மாணவி இருவரையும் ஒன்றாக சேர்த்து படுக்கை அறையில் நிர்வாணமாக நிற்க வைத்து பலகோணங்களில் புகைப்படங்கள் எடுத்தும், இருவரையும் ஒன்றாக இருப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளனர்.

இதையடுத்து பாலாஜி அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை மாணவிகளிடம் காண்பித்து அவர்களிடம் உல்லாசமாக இருக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

அப்படி மறுக்கும் மாணவிகளிடம் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டி பணம் பறித்துள்ளார். இதற்கு சஞ்சனா உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் இருவரின் செல்போனையும் பொலிசார் பறிமுதல் செய்து பார்த்த போது, அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள், ஆபாச வீடியோ போன்றவை இருந்துள்ளது.

இதுவரை அவர்கள் எத்தனை மாணவ, மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். எவ்வளவு பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்