அழகில் மயங்கி அந்த பெண் பின்னால் சென்றேன்... இப்படி நடந்துவிட்டது! டெலிவரி நபரின் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். குறித்த பெண் விட்டில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின் தொடர்ந்து வந்த அந்த வாலிபர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்கு வந்ததால், இதைக் கண்ட அந்த பெண், என்னை ஏன் பின் தொடர்ந்து வருகிறீர்கள்? என்று கேட்க, அதற்கு அந்த நபர் நீங்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் அதை கொடுக்க வந்தேன் என்று கூற, உடனே அந்த பெண் நான் எல்லாம் எதுவும் ஆர்டல் செய்யவில்லை என்று கூற, அதற்கு உங்கள் வீட்டில் யாரேனும் ஆர்டர் செய்திருப்பார்கள் என்று கூற, எங்கள் வீட்டில் யாரும் இல்லை, முதலில் நீங்கள் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த நபர் குறித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வருவதற்குள் அந்த டெலிவரி ஊழியர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதையடுத்து இது குறித்து உடனடியாக கவால்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், குறித்த நபர் வேளச்சேரி நகரை சேர்ந்த பிரசாந்த் (32) என்பது தெரியவந்தது. இவர், பிரபல ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் வேளச்சேரி வணிக வளாகம் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த பெண் மிகவும் அழகாக இருந்ததால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

நான் சற்று குடிபோதையில் இருந்ததால் உடனே இந்த பெண்ணை என்னுடைய இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் என்னையே மறந்து அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்று 5 கி.மீற்றர் தொலைவுக்கு அவர் வீட்டிற்கே சென்றேன்.

அப்போதும் நான் எப்படியாவது பேச வேண்டும் என்ற நோக்கில் அவரிடம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று கூறியபடி அந்த பெண்ணை நான் பார்த்தேன்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போதையில் நான் ஏதாவது செய்துவிடுவேன் என்று கருதி சத்தம் போட்டதால், நாங்க அங்கிருந்து ஓடிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்