திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிட்ட பிரதமர் மோடி

Report Print Vijay Amburore in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்லாந்து நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதி நடைபெற உள்ள ஆசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பாங்காக் நகரில் அமைந்துள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் தாய்லாந்து வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது தமிழில் வணக்கம் எனக்கூறி உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் பெயர்த்த திருக்குறள் நூலை வெளியிட்டார்.

அதன்பிறகு குருநானக்கின் 550வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றை மோடி வெளியிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்