என்னால் சீமான் கட்சியில் இணைந்தவர்கள் மன்னிக்க வேண்டும் - பெண் வெளியிட்ட அதிரடி வீடியோ

Report Print Abisha in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்னால் கட்சியில் இணைந்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும், நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சி நாங்குநேரி தொகுதியில் தோல்வியை தழுவியது. அவரைவிட 749 வாக்குகள் கூடுதலாக ஹரி நாடார் பெற்றார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார்.

இது பற்றி கல்பனா கூறும் போது, சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக இருப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக ஈழம் குறித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பிடித்ததால் தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் சமீபத்தில் சீமான் பேசும் போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியதோடு, அதை நாங்கள் தான் செய்தோம் என்று பகிரங்கமாக கூறினார்.

சீமானின் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை அதனால் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். அதோடு, நாம் தமிழர் கட்சிக்காக இடைத்தேர்தலில் பிரசாரம் செய்தேன். அப்போது என் பிரசாரத்தை கேட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்திருந்தால் என்னை மன்னிக்கவும் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்