உலகையே உலுக்கிய சுர்ஜித் மரணத்திற்கு காரணம் பெற்றோர் தான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

Report Print Basu in இந்தியா

உலகத்தையே உலுக்கிய சுர்ஜித் மரணத்திற்கு காரணம் குழந்தையின் பெற்றோர் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

திருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரி தம்பதியரின் இளைய மகன் சுர்ஜித் வில்சன்.

கடந்த 25ம் திகதி மாலை 5.30 மணியளவில், அப்பகுதியிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சுர்ஜித்தை உயிரோடு மீட்பதற்கு, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.

மீட்புபணிகள், 80 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த நிலையில் 29ம் திகதி குழந்தை சுர்ஜித் சடலமாகவே மீட்கப்பட்டார். சுர்ஜித்தின் மறைவை அடுத்த தமிழகம் முழுவதும் மூடாமல் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது.

vikatan

இந்நிலையில் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசியுள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுஜித்தின் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து அல்ல, தனி நபர் இடத்தில் பெற்றோரின் அஜாக்ரதையால் நடந்தது என தெரிவித்துள்ளார்.

google

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்