குழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் உயிரிழந்த தாய்! சோகச் சம்பவம்

Report Print Abisha in இந்தியா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாங்க்கனூரைச் சேர்ந்தவர் கார்திக் இவரது மனைவி தீபா. நிறைமாத கர்பிணியான இவருக்கு 18ஆம் திகதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தை பிறந்ததுள்ளது.

இந்நிலையில், அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட தையல்கள், வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிரித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதிய நிலையில், சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடு காரணம் அவர் இறந்தாரா?, அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்