பிடிப்பட்ட சிறுத்தையை வெறுப்பேற்றிய நபர்.. வினையான விளையாட்டு: திகில் வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் கூண்டில் பிடிப்பட்ட சிறுத்தையிடம் வேடிக்கை காட்டிய நபர் படுகாயமடைந்தார்.

கர்நாடகா, திப்தூரில் உள்ள தும்கூரிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த வீடியோவில், அப்பகுதியில் சுற்றிதிரிந்த சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூண்டில் ஐந்தாறிவு ஜீவன் சிக்கியுள்ளது.

இந்நிலையில், அங்கு கூடிய நபர்களில் ஒருவர், கூண்டில் சிக்கியச் சிறுத்தையிடம் குச்சி விட்டு வெறுப்பேற்றியுள்ளார். குச்சியை வாயால் கடித்து சிறுத்தை, பலமாக இழுக்க, அந்த நபர் சிறுத்தையின் கூண்டிற்கு அருகே விழுந்துள்ளார்.

உடனே சிறுத்தை அவரை தாக்கியுள்ளது. எனினும், அங்கிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு உயிரை காப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுத்தை நபரின் கையில் பிராண்டியதில் தசை கிழிந்து அந்த நபருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் முழுவதையும் சம்பவயிடத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்