மருத்துவமனையிலிருந்து நடிகை பரவை முனியம்மா வெளியிட்ட வீடியோ: உருக வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

சமூகவலைதளங்களில் பரவிய வதந்தியை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை பரவை முனியம்மா வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

விக்ரம் நடித்த தூள் படத்தின் மூலம் பிரபலமான பரவை முனியம்மாள், அண்மையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், பரவை முனியம்மாள் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில் நான் நலமுடன் இருக்கிறேன் என அவர் மருத்துவமனையில் இருந்த படி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, பரவை முனியாம்மாவின் சிகிச்சைகளை உடனிருந்து கவனித்து வரும் நடிகர் அபி சரவணன், பாட்டியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பாதீர்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார்.

எனினும், தற்போது பரவை முனியாம்மாவின் வீடியோ வெளியாகியதால், அவர் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்