சுர்ஜித் உயிரை ஏன் காப்பாற்றவில்லை? ஆத்திரமடைந்த இளைஞர் செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

சுர்ஜித்தை மீட்க அரசு முறையாக செயல்படவில்லை என கூறி இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் எம்ஐடி மேம்பாலம் அருகே 100 மீட்டர் உயரம் உள்ள செல்போன் டவரில் ஏறிய இளைஞர் ஒருவர் கருப்பு கொடியுடன் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த இளைஞரின் பெயர் ஹரிகரன் என்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் செல்போன் மூலம் அவரிடம் பேசினர், அப்போது அந்த இளைஞர், பொலிசாரிடம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்க அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இது பெரும்பான்மையான மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டிப்பதாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து இளைஞர் ஹரிகரனை மீட்பது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் ஹரிகரனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்