நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறிய மனைவி! அதிர்ச்சியடைந்த கணவன்.. பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவர் தற்கொலை செய்த வழக்கில் புதிய திருப்பமாக இறந்தவரின் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த கருப்பையா - கீதா தம்பதிக்கு பிரதீபா மற்றும் ஹேமலதா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.

கருப்பையா தேனீர் கடை நடத்தி வந்ததோடு பெட்ரோல் பங்கிலும் பணிபுரிந்து வந்தார், அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் கீதா கடையை கவனித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கருப்பையா வீட்டில் சிலிண்டரை வெடிக்க செய்து இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கருப்பையாவின் மனைவி கீதாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும் சில காலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரகசியத்தை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அறிந்த கருப்பையா துடித்து போன நிலையில் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது தகராறில் கீதா ஈடுபட்டதால் இம்முடிவை எடுத்தார் என தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது கருப்பையா, கீதாவின் பிரச்சனை பெரிதாகி காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இருவரையும் சமாதானம் செய்து கீதாவை மதுரையிலுள்ள அவரது உறவினர் வீட்டுக்கு பொலிசார் அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த நிலையில் கருப்பையாவை போனில் தொடர்புகொண்ட கீதா, தான் ஆனந்தை திருமணம் செய்து கொண்டதாகவும் இனி வீட்டுக்கு வரப்போவதில்லை என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்த கருப்பையா இரண்டு பெண் குழந்தைகளைக் கூட எண்ணிப்பார்க்காத மனைவியின் இந்த செயலால் மனம் நொந்துபோய் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் கீதாவையும் ஆனந்தையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக கீதா, அவரது தந்தை பெரிய கருப்பன், சித்தப்பா மலைச்சாமி ஆகியோரை கைது செய்துள்ள பொலிசார் ஆனந்த உட்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்