சிறுவன் சுஜித் மீட்புப்பணிக்கு செலவான தொகை எவ்வளவு? தீயாக பரவும் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனை மீட்பதற்கு செலவான தொகை தொடர்பில் மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்பதற்கு ரூபாய் 5 லட்சம் செலவானது என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் மீட்பு பணியின் போது 5,000 லிற்றர் டீசல் மட்டுமே செலவானது எனவும் கூறியுள்ளார்.

குழந்தையை மீட்க 10 கோடி ரூபாய் செலவானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை எனவும்,

இது குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி மாலை மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க கடுமையாக போராடியும்,

இறுதியில் 80 மணி நேரத்திற்கு பின்னர் உடல் சிதைந்த நிலையில் சடலமாகவே மீட்கபட்டான்.

உடற்கூராய்வுக்கு பின்னர் நேற்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்,

பொதுமக்கள் சுஜித்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்.

இந்த நிலையிலேயே சமூக ஊடகங்களில் சுஜித் மீட்புக்கு செலவான தொகை குறித்து தகவல் பரப்பப்பட்டு, பெரும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்