தற்கொலை செய்து கொள்ளும் வயசா? இரு பிஞ்சு பிள்ளைகளை காமுகர்களிடம் பறிகொடுத்த தாய் கண்ணீர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இரண்டு சிறுமிகள் மரணமடைந்த சம்பவம் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வாளையார் அட்டப்பாடியைச் சேர்ந்த ஷாஜி மற்றும் பாக்கியம் தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள்.

இவர்களின் மூத்த மகள் 13 வயதுச் சிறுமி 2017 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து சிலர் முகமூடி அணிந்து சென்றதாக சிறுமியின் தங்கை விசாரணை அதிகாரிகளிடன் கூறியிருந்தார்.

இச்சம்பவம் நடந்து இரண்டு மாதத்துக்குள், மார்ச் 4 ஆம் திகதி மற்றொரு சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிறுமிகளின் பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

சிறுமிகளிடம் தங்களது உறவினர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாகவும் அவரை கண்டித்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு மைனர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பிரதீப் குமார் என்பவர் செப்டம்பர் 30 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். ம.மது, வி.மது மற்றும் ஷிபூ ஆகிய மூவரும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இடதுசாரிகள் என்பதால் விடுவிக்கப்பட்டனர் எனச் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்திடம் சிறுமியின் தாயார் பேசுகையில், ``தீர்ப்புக்குப் பின்னர் எல்லோரும் எனது குழந்தைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். விசாரணை சரியான முறையில் நடந்திருந்தால், குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருக்க முடியும்.

என் குழந்தைகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன். எங்களுக்கு கேரள காவல்துறை மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது.

என்னுடைய மூத்த மகளை அவர்கள் தொந்தரவு செய்தபோது எனது கணவர் பார்த்துள்ளார். பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்துகொண்டிருந்தவரால் எதும் செய்ய முடியவில்லை.

ஆத்திரமாக சத்தம்போட்டதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த விவகாரம் எனக்கு தெரியவந்ததையடுத்து தொலைபேசியில் அந்த நபருடன் வாக்குவாதம் செய்தேன்.

அடுத்தமுறை எங்கள் வீட்டுக்கு வந்தபோது அந்த நபரை விரட்டி விட்டோம். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் என் மகளை சடலமாகக் கண்டேன் என கண்கள் பனிக்க பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்