ஓயாத சண்டை.. ஒரே கயிற்றில் 1 வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை!

Report Print Vijay Amburore in இந்தியா

கோவையில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தனியார் குழாய் நிறுவனத்தில் வேலை செய்துவரும் கேசவராஜ் என்பவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு, ஊட்டியை சேர்ந்த கிருத்திகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் விடிந்து 9 மணி ஆகியும் நீண்ட நேரம் தம்பதியினரின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கேசவராஜின் பெற்றோர் ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்த போது, இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்