என்மகளை கொன்றுவிட்டனர்.... தற்கொலை வழக்கில் பெற்றோரின் இரண்டாண்டு போராட்டம்

Report Print Abisha in இந்தியா

தன்னுடைய மகளை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடுவதாக இரண்டாண்டுகளாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெற்றோர் போராடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுகலி ராஜீ நாயக் - பார்வதி தேவி தம்பதியினர். இவர்களின் மகள் பிரீத்தி. 2017ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்துவந்த அவருக்கு உடல் நலகோளறு ஏற்பட்டுவிட்டதாக பெற்றோருக்கு அலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது.

பள்ளி விடுத்திக்கு சென்ற ராஜீ அங்கு மகள் சடலமாக கிடப்பதை கண்டு அலறிதுடித்தார். பின், அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் வழக்கை முடித்தனர்.

இந்நிலையில், ராஜீ தனது மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை அவளுக்கு பள்ளியில் இருந்து பல பிரச்னைகள் இருந்தது என்று காவல்நிலைத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அவர் இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் என் அலைப்பேசியில் அழைத்து பேசியிருந்தார்.

அப்போது ”பள்ளி தாளாளர் மகன்கள் இருவர் என்னிடம் பேசினார்கள், அவர்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் இங்கு படிக்க முடியாது என்றார்கள்” என்று தெரிவித்தாக அவர் கூறியிருந்தர்.

இதன் அடிப்படையில், பள்ளி தாளாளர் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது அவர்களுக்கு நீதி வேண்டி சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கோரிக்கையாக அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், என்மகள் கொலை வழக்கில் பொலிசாரைவிட தாங்கள்தான் அதிக ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும், அவர் பாலியல் வள்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கும் நீதி வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்து பிரீத்தி இறப்பு வழக்கு பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கர்னூல் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

சமீபத்தில் பிரீத்தியின் பெற்றோர் ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமாக பவன் கல்யாணை நேரில் சந்தித்து தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

பிரீத்தி விவகாரம் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த வழக்கை மீண்டும் எடுத்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்