காணாமல் போன நாளில் எங்கிருந்தார்? என்ன செய்தார்? .... கூறினால் முகிலனுக்கு ஜாமின்

Report Print Abisha in இந்தியா

காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்தால் ஜாமீன் வழக்குவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இயற்கை பாதுகாப்பு, ஜல்லிகட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் போராட்டம் நடத்திய முகிலன் கடந்த பிப்ரவரி 15ஆம் திகதி சென்னையில் பேட்டியளித்தபின் மாயமானார்.

அதன் பின் அவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதனால், முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின் முகிலன் திருப்பதி இரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்கு, பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முகிலன் காணாமல் போன தினத்தில் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முகிலன் தரப்பு அவரை யாரோ கடத்திவிட்டதாக தெரிவித்தனர். அரசு தரப்பு அவருக்கு ஜாமின் வழங்கினால் மீண்டு தலைமறைவாக வாய்ப்புள்ளது எனவே, ஜாமின் வழங்க கூடதென தெரிவித்தது.

அதை தொடர்ந்து நீதிபதி, முகிலன் காணாமல் போன தினத்தில் அவர் என்ன செய்தார், எங்கிருந்தார் என்று விளக்கமளித்தால், ஜாமின் வழங்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நவம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்