குழந்தை சுர்ஜித் மரணம் தொடர்பாக முதல் முறையாக பேசிய சீமான்... என்ன சொன்னார்?

Report Print Raju Raju in இந்தியா

சுர்ஜித் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்முறையாக பேசியுள்ளார்.

சீமான் அளித்துள்ள பேட்டியில், இதுவரை நாடெங்கும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும் நாம் இது தொடர்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இது நாம் தோற்று விட்டோம் என்பதை தலைகுனிவோடு ஒத்து கொள்ள வேண்டிய உண்மை.

பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் கூறியும் அதை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இது தான் இளம் பிஞ்சு சுர்ஜித்தின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.

இனி வரும் காலத்திலாவது இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய படிப்பினை சுர்ஜித் மரணம் நமக்கு கொடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்