சுர்ஜித்தின் புகைப்படங்கள் ஏன் வெளியிடப்படவில்லை? அவன் சடலம் முழுவதும் மீட்கப்பட்டதா.. அதிகாரபூர்வ தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

சுர்ஜித் உயிரிழந்த செய்தியை முதன் முதலில் அதிகாரபூர்வமாக அறிவித்த ராதாகிருஷ்ணன் இன்று அளித்துள்ள பேட்டியில், சுர்ஜித் மீட்புப் பணியில் கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப் பணியாளர்களை கவலையடைய செய்துள்ளது.

சுர்ஜித் மீட்புப் பணிகள் தொடர்பாக அவன் பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியும். கும்பகோணம் தீ விபத்து குழந்தைகளின் படங்களை காட்சிப்படுத்தியதால் பல விமர்சனங்கள் ஏற்பட்டது. அதனால் சுர்ஜித் படங்களை வெளியிடவில்லை என கூறினார்.

சுர்ஜித் உடல் முழுமையாக மீட்கப்பட்டடதா என்ற கேள்விக்கு, இறந்த பிறகு சடலத்தை மீட்பதற்கு ஒரு விதிமுறை உள்ளது, அது தான் இந்த இடத்தில் பின்பற்றப்பட்டுள்ளது என்றார்.

மேலும், மீட்புப் பணியில் பல கோடி செலவானதாக வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல் முழுவமும் வதந்தி. போர்வெல் என்பது விபத்து தான், பேரிடர் அல்ல, சுர்ஜித்தை மீட்க முடியாதது துரதிருஷ்டவசமானது. மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம்.

இனியும் சுர்ஜித்துக்கு நடந்தது போன்ற சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதால் இது போன்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்