பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியல்..! முதலிடம் பிடித்த இந்தியா

Report Print Vijay Amburore in இந்தியா

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுகாதாரம், பாகுபாடு பார்த்தல், கலாசார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள் கடத்தல் என 6 மரபுகளை அடிப்படையாக கொண்ட ஆய்வினை தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்தியது.

பெண்கள் பிரச்னைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதார பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஆன்லைன், தொலைபேசி மற்றும் நேரடியாக தொடர்பு கொண்டு மார்ச் 26 முதல் மே 4ம் திகதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான், சிரியா இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

முன்னதாக இதேபோல ஏழு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா நான்காம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்