சுர்ஜித்தை போன்றே நான்கு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த அவன் குடும்பத்தை சேர்ந்த நபர்... யார் அவர்?

Report Print Raju Raju in இந்தியா

சுர்ஜித் குடும்பத்தில் நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு துயரம் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.

சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜின் பெரியப்பா மகன் ஜான் பீட்டர்.

இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறையில் கடந்த மே மாதம் ஊருக்கு வந்திருந்தார். இவரும் பிரிட்டோ வீட்டுக்கு அருகில் தான் வசித்து வந்தார்.

அப்போது வீட்டிலிருந்த கோழி ஒன்று வேகமாக ஓடிய நிலையில் அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் விழுந்து விட்டது.

இதையடுத்து கயிறு கட்டி ஜான் பீட்டர் கிணற்றுக்குள் இறங்கி கோழியை மீட்டுக் கொண்டு மேலே வந்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விட்டது.

இதனால் கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கிணற்றை மூடி விட்டனர்.

இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் சுர்ஜித்தை பறி கொடுத்துள்ளது பிரிட்டோ குடும்பம். அடுத்தடுத்து இரு துயரங்கள், அதுவும் இருவருமே கிணற்றில் விழுந்து பலியாகியிருப்பது பீட்டர் குடும்பத்தினரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்