கணவர் உயிரை காப்பாற்றுங்கள்... 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் நளினி.. உடல்நிலை அறிக்கை

Report Print Raju Raju in இந்தியா

கணவர் முருகன் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி நளினி 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18ம் திகதி சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்து, அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையில், முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாகவும், அவரது உயிரை காப்பாற்றவேண்டும் எனவும் கோரி நளினி கடந்த 26ம் திகதி முதல் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில், 4வது நாளாக நளினி நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நளினி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சிறைத்துறை டிஐஜி, சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதே போல வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனும் 10வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்