குழந்தை சுர்ஜித்துக்காக கதறி அழுத வானம்! தற்போது எப்படியிருக்கிறது அவன் வசித்த ஊர்?

Report Print Raju Raju in இந்தியா

குழந்தை சுர்ஜித் உயிரிழந்துவிட்ட நிலையில் அவன் வசித்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தின் தற்போதைய நிலை தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பிரிட்டோ - கலா மேரி தம்பதியின் இளைய மகன் சுர்ஜித் வில்சன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

இதை தொடர்ந்து 80 மணி நேரத்துக்கும் அதிகமாக அவனை மீட்க பல்வேறு முயற்சிகள் நடந்தும் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

சுர்ஜித் உயிர் இழந்துவிட்டதாக தமிழக வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவித்த அடுத்த சில நிமிடங்களில், வானமும் கண்ணீர் சிந்தும் விதமாக மழை கொட்டி தீர்த்தது.

இதன்பின்னர் சுர்ஜித் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

4 நாள்கள் கொட்டித் தீர்த்த மழையிலும் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள், சுஜித் வில்சனின் படத்தைப் பார்த்து அழுதபடி வணங்கிச் சென்றனர்.

அதே நேரத்தில் சுர்ஜித்தை வெளியே எடுக்கப் பெரிய துளைகள் போட கொண்டுவரப்பட்ட ரிக் வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.

அந்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், காலையில் இருந்து பல பேர் வந்தார்கள். இவ்வளவு பேரை தவிக்கவிட்டு அந்த ஜீவன் போய்விட்டது.

இந்த அதிகாரிகள் சிறித்து சுதாரித்து முன்னரே யோசித்து துரித நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்