திருமணமான சில நாட்களில் புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு: கண்ணீரில் பெற்றோர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் புகுந்த வீட்டில் ஏற்பட்ட துன்புறுத்தல் காரணமாக புதுமணப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் Chandrayangutta பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

முபீன் பேகம் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் புகுந்த வீட்டில் கணவர் மற்றும் அவரது உறவினர்களால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு இரையாகி வந்துள்ளார் முபீன் பேகம்.

இந்த நிலையில், தமது பெற்றோரிடம் முறையிட வந்த முபீன் பேகம், குடியிருப்பில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், அவரது சடலத்தை மீட்டு ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்