போலி பாஸ்போர்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள்.. வைத்த கோரிக்கை

Report Print Raju Raju in இந்தியா

திருச்சி சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் உள்ள 8 இலங்கை தமிழர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 35 இலங்கை தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளை 60 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்களான நிஷந்தன் (35), அகில்தாஸ் (25), கிருபரசா (51), நிமலன் (31), தரகன் (21), உதயகுமார் (37), சுரேந்திரன் (39) மற்றும் ஹரிகரன் (34) ஆகியோர் போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு தப்பி செல்ல முயன்றதாக கடந்த 3 மாதங்களுக்கு முன் கைது செய்த சென்னை க்யூ பிரிவு பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி முகாம் சிறையில் அடைத்தனர்.

அவர்களுக்கு இந்த வழக்கில் 61 நாட்கள் சென்னை சிறையில் இருந்தனர்.

ஜாமீன் கிடைக்கும் வரை அங்கு அவர்கள் வைக்கப்பட்ட போது, அது கிடைப்பதற்கு முன்னரே திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மாதக்கணக்கில் இழுத்துகொண்டே செல்லும் இந்த வழக்கை விரைவாக முடிக்க கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் அதில் எழுதப்பட்டுள்ளது.

இதனிடையில் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க கோரி 8 பேரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், இது குறித்து அவர்களிடம் வருவாய் பிரிவு அதிகாரி பேசி வழக்கை விரைந்து விசாரித்து நடக்கவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆனால் அவர்கள் இது தொடர்பாக எழுத்துபூர்வமாக எழுதி கொடுக்க கேட்கிறார்கள்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இரண்டு மாதத்துக்குள் இது முடிவுக்கு வரும் என எங்களால் அவர்களுக்கு உறுதியளிக்க முடியாது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்