ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானின் கருத்து அநாகரீகமானது! கனிமொழி

Report Print Kabilan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரீகமானது என தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி செர்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தபோது, அவரிடம் சீமானின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கனிமொழி, ‘ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரீகமானது’ என தெரிவித்தார்.

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதி பிரசார கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததால், சீமான் மீது விக்கிரவாண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers